வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாக மீண்டும் தெரிவித்துள்ளார்
சென்ற மாதம் காஷ்மீர் விவகாரத்தில் தாம இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய உள்ளதாகவும் அது குறித்து தம்மை இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அது இந்தியாவில் கடும் சர்ச்சையை உண்டாக்கியது. பிரதமர் மோடி இவ்வாறு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்தார்.
விதி எண் 370 விலக்கிக் கொள்ளப்பட்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது . . இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அரசு இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் சென்றது. ஆனால் பாகிஸ்தான் கோரிக்கையை கவுன்சில் ஏற்கவில்லை. அதையொட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவைக் குறித்து கடும் விமர்சனம் செய்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வாறு வார்த்தைகளைப் பேசக்கூடாது என அறிவுரை அளித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பிசி செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றை அளித்ஹ்டுளார். அந்த பேட்டியில் டிரம்ப், “காஷ்மீரில் தற்போது நிலைமை மிகவும் கடுமையான சிக்கலில் உள்ளது. இந்த காஷ்மீர் விவகாரம் வெகு நாட்களாகத் தொடர்ந்து வருகிறது மத அடிப்படையில் மற்றும் அரசாங்க அடிப்படையில் இங்குப் பல பிரச்சினைகள் உள்ளன.
இந்த பிரச்சினைகளைத் தீர்க்க இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் அல்லது வேறு எந்த உதவியும் செய்யத் தயாராக இருக்கிறேன். எனக்கு இரு நாடுகளிடையே நல்ல நட்பு உள்ளது. இந்த நேரத்தில் நான் இதற்கு ஒரு தீர்வு காண உதவ விரும்புகிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.