அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஹமாஸ் தலைவர்கள் ரகசிய சந்திப்பு நடத்திய நிலையில், அவர்களிடம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்குமாறு டிரம்ப் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதிபர் டிரம்ப் மற்றும் பாலஸ்தீன போராளி குழு தலைவர்களிடையேயான இந்த ரகசிய சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பணயக்கைதிகளை விடுவிக்கவும், இறந்த உடல்களை தாமதமின்றி திருப்பி அனுப்பவும் டிரம்ப் கோரினார், அவ்வாறு செய்யத் தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஷாலோம் ஹமாஸ் என்றால் வணக்கம் மற்றும் விடைபெறுதல் – அனைத்து பணயக்கைதிகளையும் இப்போதே விடுவித்து காஸாவை விட்டு வெளியேறவும். இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கை” என்று கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேலுக்கு ‘வேலையை முடிக்க’ தேவையான ‘எல்லாவற்றையும்’ கொடுப்பேன் என்றும், அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியத் தவறினால் ஹமாஸின் ஒரு உறுப்பினர் கூட இருக்கமாட்டார்கள் என்று எச்சரித்தார்.
“இது உங்களுக்கான கடைசி எச்சரிக்கை! தலைமைக்கு, இப்போது காசாவை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது, உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.
மேலும், காசா மக்களுக்கு: ஒரு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது, ஆனால் நீங்கள் பணயக்கைதிகளை வைத்திருந்தால் அதுவும் இல்லை. ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுங்கள்.
பணயக்கைதிகளை இப்போதே விடுவிக்கவும், இல்லையெனில் பின்னர் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்!” என்று அவர் டிரம்ப் கூறியுள்ளார்.