வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையான வார்த்தைகளால் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோ விமர்சித்துள்ளார்.
உலகெங்கும் பரவி கொரோனாவின் பாதிப்பு அமெரிக்காவில் மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 14.57 லட்சத்துக்குமேல் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து சரியான நடவடிக்கை எடுப்பதில்லை எனப் பலரும் குறை கூறி வருகின்றனர். சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் டிரம்பின் நடவடிக்கைகளைக் குறை கூறி உள்ளனர்.
பிரபல நடிகர் ஆஸ்கார் விருது வென்றவருமான ராபர்ட் டி நீரோ கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் டிர்மப் குறித்து கடும் விமர்சனங்கள் கூறி வருகிறார். சில தினங்களுக்கு முன்ப் நடந்த ஒரு வீடியொ ஷோவில் அவர் அதிபர் டிரம்ப் ஐ அப்பட்டமான முட்டாள்,, அறிவிலி போன்ற வார்த்தைகளால் விமர்சித்தார். அதன் பிறகு அது நீக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. அந்த ஷோவில் அவர் டிர்மப் முகத்தில் தாம் ஓங்கிக் குத்த விரும்புவதாகக் கூறி இருந்தர்.
மற்றொரு முறை ஒரு பொது நிகழ்வில் ராபர்ட் டி நீரோ ”இனி டிரம்ப் ஒழிக எனக் கூறுவதற்குப் பதில் டிரம்ப்… (பிரசுரிக்க முடியாத ஒரு வார்த்தை) எனக் கூறலாம்” எனக் குறிப்பிட்டதற்குப் பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மற்றொரு முறை, “கொள்ளை கும்பலில் தலைவருக்கும் ஒரு சில நல்லொழுக்கம் மற்றும் கட்டுப்பாடு இருக்குமானால் நமது அமெரிக்க அதிபருக்கு அந்த வார்த்தைகளின் பொருளே தெரியாது” என விமர்சித்தார்.
நேற்று முன் தினம் நடந்த ஒரு பொது நிகழ்வில் “அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுவது ஆங்கில விஞ்ஞான திரைப்படங்களில் உள்ளதைப் போல் உள்ளது. அவை கற்பனை இது நிஜம் என்பது மட்டுமே ஒரே மாற்றமாக உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவால் ஏராளமானோர் மரணம் அடைவது குறித்து கவலைப் படாத ஒரு பைத்தியமாக இருக்கிறர். இந்தநிலையில் அவர் மீண்டும் அதிபராக விரும்புகிறார்” என ராபர்ட் டி நீரோ தெரிவித்துள்ளார்.