வாஷிங்டன்

ட கொரியாவில் உள்ள மூன்று அமெரிக்க கைதிகளுக்கு விரைவில் விடுதலை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த மூவர் வட கொரிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  அமெரிக்காவை சேந்த கிம் டோங் கடந்த 2015 ஆம் வருடம் அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.   அவர் வட கொரியாவில் உளவு வேலை பார்த்ததாகவும் ராணுவ ரகசியங்களை தென் கொரியாவுகாக திருட முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார்.  டோனிகிம் அண்ட் கிம் ஹாக் ஆகியோர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு இன்னும் விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் மூவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.  அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “வட கொரிய்வாவில் அடைபட்டுள்ள மூவரையும் விடுவிக்க அமெரிக்க அரசு பல நாட்களாக முயன்று வருவது தெரிந்ததே.   இனி காத்திருக்க வேண்டாம்.  விரைவில் நடக்கும்” என சூசகமாக தெரிவித்துளார்.

தற்போது இந்த மூவரும் மருத்துவ சிகிசை பெற்று வருவதாக கூறப்படுகிறது.   இது குறித்து   அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர், “இந்த மூவரின் விடுடலை குறித்து நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் தெரிகிறது.   இன்னும் விடுதலை குறித்து சரியான தகவல் தெரியாத போதும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.   நாங்கள் அதற்கு கடுமையாக பாடுபட்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.