வாஷிங்டன்
கம்யூனிஸ்ட் கட்சி சீன பிரதமர் இருமுறை மட்டுமே பதவி வகிக்கலாம் என்பதை நீட்டித்து தற்போதைய பிரதமர் ஜி ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் பிரதமர் பதவி வகிக்க வழி செய்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட திட்டங்களின் படி ஒருவர் இருமுறை மட்டுமே பிரதமராக பதவி வகிக்க முடியும். அதன் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி அவரை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்காது. தற்போது சீனாவில் பிரதமராக பதவி வகித்து வரும் ஜி ஜின்பிங் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 25 உடன் முடிவுற்றது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் ஜி ஜின்பிங் பிரதமராக பதவி வகிக்க இருமுறை மட்டுமே இருந்ததை நீட்டித்துள்ளது. கட்சி விரும்பும் வரை அவர் பிரதமர் பதவியில் நீடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் கட்சி அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்காது என்பதும் அவர் தனது வாழ்நாள் முழுவதும் சீனப் பிரதமராக பதவி வகிக்க முடியும் என்பதும் தற்போது தெளிவாகி உள்ளது.
இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், “சீனப் பிரதமர் தனது வாழ்நாள் முழுவதும் பிரதமராக பதவியில் இருக்க முடியும். இது அவருக்கு ஒரு பெருமை. அவர் ஒருவரால் மட்டுமே இந்த சாதனை செய்ய முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தி உள்ளார்” என புகழ்ந்துள்ளார்.
மேலும் கடந்த நூறாண்டுகளில் அவரை போல ஒரு சிறப்பான பிரதமர் கிடையாது எனவும் அவர் ஒரு நேர்த்தியான பிரஜை என்பது இதன் மூலம் புலனாகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதே நிலை அமெரிக்காவிலும் உள்ளது. கடந்த 1932 ஆம் வருடம் கடைசியாக பிராங்கிலின் ரூஸ்வெல்ட் 4 முறை அதிபராக பதவி வகித்துள்ளர். அதன் பிறகு யாரும் இரு முறைக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது என அமெரிக்கா சட்டம் இயற்றி உள்ளது.