வாஷிங்டன்

கொரோனா வைரச் அச்சம் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வர 30 நாட்கள் தடை விதித்துள்ளார்.

உலகெங்கும் உள்ள மக்கள் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.  மொத்தம் 100 நாடுகளில்  வைரஸால் சுமார் 1.2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கபட்டுளனர்.  சுமார் 4200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.  உலக சுகாதார மையம் கொரோனாவை கொள்ளை நோய் என அறிவித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது.   அது ஐரோப்பா கண்டம் முழுவ்தும் பரத் தொடங்கி உள்ளது.  இதற்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் அதிக பாதிப்பு உள்ளது.  இதையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அறிக்கை வெளியிட்டுளார்.  அந்த அறிக்கையில் நாளை முதல் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு  30 நாட்கள் தடை விதித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும தனது டிவிட்ட்ரில், “அமெரிக்கா உலகத்தின் மிகப் பெரிய நாடு ஆகும்.  நம்மிடம் மிகச் சிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார நல ஊழியர்கள் உள்ளனர்.  அவர்கள் மக்கள் ஏன் சரியான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வதில்லை என அதிசயிக்கின்றனர்.

ஊடகங்கள் தற்போதைய நிலையை ஒருமைப்பாட்டு மற்றும் வலிமைக்கான நேரம் என நோக்க வேண்டும். கொரோனா வைரஸ் என்பது உலகத்துக்கே எதிரி ஆகும். அந்த வைரஸை விரைவில் அடித்து ஒழிப்பதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.  அமெரிக்க மக்களின் பாதுகாப்பே இப்போது எனக்கு முக்கியமாக உள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.