வாஷிங்டன்

ற்போது குடியரசுக்கு கட்சியால் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு முன்பு அதிபர் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார்.

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டிர்மப் களத்தில் உள்ளார்.  ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு செய்ய ஜோ பிடன், இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ், உள்ளிட்ட மூவர் போட்டியில் இருந்தனர்.   நிதி நெருக்கடி காரணமாக கமலா ஹாரிஸ் போட்டியில் இருந்து விலகவே ஜோ பிடன் வேட்பாளரானார்.

இன்று ஜோ பிடன் தாம் வெற்றி பெற்றால் துணை அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் இருப்பார் என அறிவித்தார்.  இது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தற்போது அதிபர் தேர்தலில் எதிர் அணியில் உள்ள டிரம்ப் முன்பு கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளித்துள்ளார்.  இது பலரும் அறியாத ஒரு நிகழ்வு ஆகும்.  இது குறித்து இங்கு காண்போம்

அதிபர் டிரம்ப் பலமுறை கட்சி மாறியவர் என்பது பலரும் அறிந்ததே.  கடந்த 1987 ஆம் வருடம் அவர் மன்ஹாட்டன் பகுதியில் குடியரசுக் கட்சியில் இருந்தார்.  அதன் பிறகு அவர் 1999 ஆம் வருடம் சீர்திருத்த கட்சிக்கு மாறினார்.  அதன் பிறகு 2001 ஆம் வருடம் ஜனநாயகக் கட்சிக்கு மாறினார். இறுதியாக மீண்டு 2009 ஆம் வருடம் குடியரசுக் கட்சிக்கு மாறினார்.

அவர் 2014 ஆம் வருடம் குடியர்சுக் கட்சியில் இருந்த போதிலும் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் தேர்வில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளித்துள்ளார். அத்துடன் அவரும் அவர் மனைவி இவாங்கா டிரம்ப் இருவருமாகக் கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரத்துக்கு நன்கொடை அளித்துள்ளதும் பலரும் அறியாத ஒரு நிகழ்வாகும்.