எலான் மஸ்க் நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவதாலும், நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாகவும், அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக புதிய டெஸ்லா காரை வாங்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எலோன் மஸ்க் அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக உள்ளார்.

டிரம்ப் உத்தரவின் பேரில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ததில் எலோன் மஸ்க்கின் பங்கை எதிர்த்து, அமெரிக்கா முழுவதும் டெஸ்லாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன.

போராட்டக்காரர்கள் டெஸ்லா ஷோரூம்களை முற்றுகையிட்டு மஸ்க்கிற்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

“எலோன் மஸ்க் நாட்டிற்காக அற்புதமான விஷயங்களைச் செய்கிறார்.” இருப்பினும், டெஸ்லாவை புறக்கணிக்க இடதுசாரிகள் எலோன் மஸ்க்கைத் தாக்குகிறார்கள். “மஸ்க்கை ஆதரிக்க நான் ஒரு புதிய டெஸ்லாவை வாங்கப் போகிறேன்” என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

டிரம்பின் ஆதரவுக்கு எலோன் மஸ்க் நன்றி தெரிவித்தார்.