அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை (Internal Revenue Service
– IRS) ஊழியர்கள் சுமார் 6000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

டிரம்பின் மிகப்பெரிய பிரச்சார நன்கொடையாளரான தொழில்நுட்ப பில்லியனர் எலோன் மஸ்க் தலைமையில் உள்ள DoGE துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பைடன் ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட சுமார் 10,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பணி நீக்கம் தொடர்ந்து வருகிறது.

வரி அமலாக்க அலுவலர்கள், வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வனத்துறை ஊழியர்கள், ராக்கெட் விஞ்ஞானிகள் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்ய இந்த வார துவக்கத்தில் முடிவெடுக்கப்பட்டது.

2021-ல் பைடன் பதவியேற்பதற்கு முன்பு 80,000 பேர் பணியாற்றிய வரி நிறுவனத்தில் இப்போது சுமார் 100,000 பேர் பணியாற்றுகின்றனர்.

சிக்கன நடவடிக்கை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ள புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

ஓராண்டு நிறைவு பெறாத புரொபேஷன் அலுவலர்களை குறிவைத்துள்ள டிரம்ப் முதலில் இவர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக தற்போது அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை ஊழியர்கள் சுமார் 6000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.