அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த ஒரு விபத்து இப்போது “Breaking News”-ஆக மாறியுள்ளது.
துலேன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு ஆராய்ச்சி மையத்திலிருந்து ரீசஸ் குரங்குகள் ஏற்றிச் சென்ற லாரி ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதிலிருந்த “அறிவியல் ஆராய்ச்சி ஹீரோக்கள்” — சாட்சாத் ரீசஸ் குரங்குகள் தான் — அவை அடைத்து வைக்கப்பட்ட கூண்டுகள் உடைந்ததால் கிடைத்த கேப்பில் எஸ்கேப் ஆகியுள்ளன.

1948ல் அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பிய முதல் குரங்கும் ரீசஸ் தான் — ஆல்பர்ட் II
அந்த இனத்திலிருந்தே மருத்துவர்கள் மனித இரத்தக் குழுக்களை கண்டறிந்தனர் (அதனால்தான் “Rh factor”).

இதில் பெரும்பாலான குரங்குகள் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு குரங்கு மட்டும் மிஸ்ஸிங் ஆனது தெரியவந்தது.
இப்போது பிரச்சனை என்னவென்றால், தப்பிச் சென்ற இந்த குரங்குகளில் சிலவற்றுக்கு கோவிட், ஹெபடைட்டிஸ் சி, ஹெர்பெஸ் போன்ற தொற்று நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்நகர ஷெரிப், “மக்கள் யாரும் குரங்குகளை பிடிக்க வேண்டாம்! PPE இல்லாமல் நெருங்கினால், குரங்கு உங்களையே ஆராய்ச்சி செய்யும்!” என்ற ரேஞ்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வனவிலங்கு துறை “மிஷன் மிசிசிப்பி” என்ற பெயர்வைக்காத குறையாக “ஹாலிவுட் த்ரில்லர்” பாணியில் குரங்கு வேட்டையில் இறங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அதேவேளையில் ஷெரிப் அலுவலகம் கூறுவது போல் இந்த குரங்குகளுக்கு தொற்று எதுவும் இல்லை என்று துலேன் பல்கலைக்கழகம் அடித்துக் கூறியுள்ளது.