தெலுங்கானா மாநில மக்களவை தேர்தலில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி, பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 100 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் பகல் 12.40 மணி நிலவரப்படி,

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி: 09 தொகுதிகள்

தேசிய ஜனநாயக கூட்டணி: 04 தொகுதிகள்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி: 03 தொகுதிகள்

இதர: 01 தொகுதி

இவ்வாறு முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன

[youtube-feed feed=1]