பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஒருவர் பெண் அமைச்சரிடம் சில்மிஷம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரிபுராவில் உள்ள அகர்தலா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைததார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி, முதலைமைச்சர் பிப்லப் தேவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற மேடையின் எதிரே திரிபுரா மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாடுத்துறை அமைச்சர் மனோஜ் காந்தி தேவ் இருந்தார். அவருக்கு அருகில் சமூக நலத்துறை அமைச்சர் சாந்தனா சக்மா இருந்தார். பிரதமர் மோடி கல்வெட்டை திறந்து வைத்த போது அமைச்சர் மனோஜ் காந்தி தேவ் அருகில் இருந்த பெண் அமைச்சரின் ( சாந்தனா சக்மா) இடிப்பில் கை வைத்தார். உடனே அவரது கையை சாந்தனா தட்டி விட்டார்.
பெண் அமைச்சரின் இடுப்பில் ஆண் அமைச்சர் ஒருவர் கை வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து மனோஜை பதவி நீக்கம் செய்யும்படி, எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனினும், பாதிக்கப்பட்ட பெண் அமைச்சர் புகார் அளிக்காததால், இதனை தவறாக பரப்பப்பட்டு எதிர்க்கட்சிகள் இழிவான அரசியல் செய்வதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.