அகர்தலா:
திரிபுராவில் பாஜக&ஐபிஎப்டி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள உள்ளூர் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் செய்திகள் இந்தி மொழியில் தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிட திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. 2வது அலுவல் மொழியாக உள்ள கோக்போரக்கிற்கு மாற்றாக இதை செயல்படுத்தவுள்ளது.
தேச பற்றை வளர்க்கவும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் 6ம் தேதி நடந்த தகவல் மற்றும் கலாச்சார விவகாரத் துறை அமைச்சக ஆலோசனை கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபுரா அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், சிபிஎம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.