டெல்லி

டெல்லி சட்டபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திருணாமுல் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் பிரசார்ம  செய்ய உள்ளன.

பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ள70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தலில். பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.. தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன.

ஏற்கனவே இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ் வாதி கட்சி, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் பிரிவு) தெரிவித்திருந்த நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்காக இந்த கட்சிகள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளன.

ஜனவரி 31 ஆம் தேதி முதல் டெல்லியின் பூர்வாஞ்சல் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் திரிணாமூல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா பிரசாரம் மேற்கொள்ள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து  ஜனவரி 30 ஆம் தேதி அன்று டெல்லியின் ரிதாலா தொகுதியில் வாகன பேரணியில் ஈடுபட உள்ளார்.