மே.வங்க மாநிலத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை. தேர்தல் நடைபெறுகிறது.
ஆட்சியை பிடிக்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான இடதுசாரிகளும் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் திரினாமூல் காங்கிரஸ் கட்சி, திடீரென, காங்கிரஸ் கட்சியையும், இடதுசாரிகளையும் தங்கள் அணியில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து திரினாமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகத் ராய் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் பா.ஜ.க.வை எதிர்ப்பது நிஜமாக இருந்தால், இரு கட்சிகளும் திரினாமூல் காங்கிரசை ஆதரிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முதல்–அமைச்சர் மம்தா பானர்ஜி, மதச்சார்பற்ற சக்திகளின் முகம்’ என்று குறிப்பிட்ட சவுகத் ராய் “மத்திய அரசின் எந்த திட்டமும் வெற்றி பெற்றதில்லை” கூறினார்.
– பா. பாரதி