சென்னை
திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் ஒரு அறிக்கைஐ வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில்,
”தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி எஸ்.சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
எனவே அவர் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
எனவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trichy Surya, BJP, removed, திருச்சி சூர்யா, பாஜக, நீக்கம்