சென்னை
திருச்சி பெல் ((BHEL) நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குமாறு திமுக எம் பி திருச்சி சிவா கடிதம் அனுப்பி உள்ளார்.
நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது. இதையொட்டி நாடெங்கும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான பணிகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் வெகு நாட்களாக அரசால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் நடத்த நிர்வாகத்துக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவ இன்று அமைச்சர் பிரகாஷ் கவடே கருக்கு எழுதிய கடிதத்தில்,
“கொரோனா பாதிப்பு காரணமாகப் பலர் தவித்து வருவதையும் அவர்கள் ஆக்சிஜன் இன்றி உயிரைக் காக்க தவிப்பதையும் தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளதை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன்
எனது சொந்த ஊரான திருச்சிராப்பள்ளியில் உள்ள பெல் யூனிட்டின் எம் எச் டி மையத்தில் 3 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தலா மணிக்கு 140 கன மீட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் உள்ளவை ஆகும். இவை கடந்த 2003 முதல் இயங்காமல் உள்ளன.
இவற்றை ஒரு சில பராமரிப்பு பணிகள் செய்தால் மீண்டும் இயக்க முடியும். இந்த பகுதியில் ஏற்கனவே பணி புரிந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் உதவியும் இவற்றை 15 முதல் 20 நாட்களில் மீண்டும் இயங்கை வைக்க முடியும். இதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி உயிரிழப்பதைத் தடுக்கலாம்”
என தெரிவித்துள்ளார்.