டெல்லி

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த ஜகதீப் தன்கருக்கு திருச்சி சிவா எம் பி கடும் எதிர்ப்புr தெரிவித்துள்ளார்

தமிழக ஆளுநருக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜகதீப் தன்கரின் கருத்து பலராலும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா ,

”அரசியலமைப்பின் படி அதிகாரங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னர் அதன் கீழ் நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டன. மூன்றும் அவற்றின் சொந்தத் துறைகளில் செயல்படும்போது அரசியலமைப்பு உயர்ந்தது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் பங்கு குறித்த சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பிரிவு 142 ஐப் பயன்படுத்தி, அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி குறைத்து மதிப்பிட முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.

இந்தநிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைத் குடியரசுத் தலைவர்  ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை! இந்திய ஒன்றியத்தில் “சட்டத்தின் ஆட்சி” நிலவுகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்.”

என்று தெரிவித்துள்ளார்

sc

[youtube-feed feed=1]