வாரணாசி,
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 15 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.
வாரணாசியில் பாபா ஜெய் குருதேவ் சபா நடத்திய அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டவர்கள் சந்தௌலி மற்றும் வாரணாசி இடையில் ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள பாலத்தை ஒரே நேரத்தில் கடக்க முயன்றனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிரதமர் மோடி இரங்கல்
வாரணாசி கூட்டநெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.