மங்களூரு

பட்டப்படிப்பு சான்றிதழை மாற்றி அளித்த கல்லூரிக்குச் செலுத்திய கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி அளிக்கத் தேசிய குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் புனித அலோசியஸ் கணிதம் மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.   இது ஒரு சுய  நிதிக் கல்லூரி ஆகும்.   இந்தக் கல்லூரியில் எம் எஸ் (மென்பொருள் தொழில்நுட்பம்) என்னும் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. இந்த படிப்பில் பல மாணவர்கள் படிப்பில்  இணைந்துள்ளனர்

அந்த மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகு அவர்களுக்கு எம் எஸ் பட்டத்துக்குப் பதில் எம் எஸ்சி பட்டம் வழங்கப்பட்டது.  இரண்டுமே அறிவியல் துறையில் முதுகலைப் பட்டங்கள் என்றாலும் எம் எஸ் என்பது தொழில்முறைக் கல்வி ஆகும்.  எனவே ஏமாற்றம் அடைந்த 11 மாணவர்கள் மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் மாணவர்கள் சார்பில் தீர்ப்பு அளிக்கப்பட்டதால் கல்லூரி நிர்வாகம் தேசிய குறை தீர்க்கும் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தது.   இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த குறைதீர் ஆணையம் கல்லூரி அளித்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.  அத்துடன் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய ரூ.1.12 லட்சம் கட்டணத்தை வழக்குச் செலவுடன் சேர்த்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.