விசாகப்பட்டினம்:
டல்நலம் பாதிக்கப்பட்ட தனது 6 மாத குழந்தையை, சிகிச்சைக்காக கழுத்தளவு தண்ணீரில் 5 கிலோ மீட்டர் தூக்கி சென்றார் தந்தை. இது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
baby-head
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது.  அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்படு வருகின்றனர்.
ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மழை நின்ற போதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பங்கி சட்டி பாபு (வயது 30). இவருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இடைவிடாத மழை காரணமாக அந்த குழந்தைக்கு  காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் இருக்கும் பகுதியை சுற்றி  தண்ணீர் நிரம்பி இருந்ததா ல், அவர் குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாமல் தவித்தார்.
ஜுரம் அதிகமாகி உடல் நலக் குறைவால் அவதிப்படும் தனது குழந்தையை காப்பாற்ற எண்ணிய  பாபு, தனது உயிரையும் பொருட்படுத்தாது,  மழை வெள்ளம்  பாதித்த  பகுதி வழியாக கழுத்தளவு தண்ணீரில் சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து  மருத்துவ மனைக்கு சென்றார்.
தனது குழந்தையை தலைக்குமேல் தூக்கி ,கழுத்தளவு தண்ணீரில்  சென்ற காட்சி, பார்த்தவர் மனதையும் பதற வைத்தது.
இது அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.