கோடா:

டந்த 9ந்தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர், தனக்கு பாகிஸ்தானை பிடிக்கும் என்று பாக்.கை புகழ்ந்தும், இந்தியாவை விமர்சித்தும் பேசினார்.

இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மணி சங்கர் அய்யர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 20ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ராஜஸ்தான் மாநில ஓபிசி பிரிவு செயலாளர் அசோக் சவுத்ரி, கோடா மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து மணி சங்கர் அய்யர் மீது,  இந்திய பீனல் கோடு செக்ஷன் 124 ஏ மற்றும் 500, 504 பிரிவுகளின் (IPC Sections 124 (A), 500 and 504)  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு  கோடா நீதிமன்றத்தில் வரும் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சராக மணி சங்கர் அய்யார் சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசியதாக, காங்கிரஸ் கட்சி  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.