தராபாத்

தராபாத் நகரில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.’

கடந்த சில நாட்களாக தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் ஐதராபாத்திலும் தொடர் மழை பெய்வதால், பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முஷீராபாத் பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலையில் நடந்து சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

மேலும் வாகனத்தில் சென்ற ஒருவர் வெள்ளத்தில் எதிர்த்தபடி சாலையில் சென்றபோது அவர், வாகனத்தோடு வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஐதராபாத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஐதராபாத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், விமான நிலையத்தின் தரையில் மழை நீர் தேங்கி இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. விமான நிலையத்தின் மேற்கூரையிலிருந்து மழை நீர் கசிந்ததால் விமான பயணிகள் அவதிக்குள்ளானர்.