சென்னை:

திய ஊயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

சென்னை உயர்நீதி மன்றம் போராட்த்துக்கு தடை விதித்து உள்ள நிலையிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு அரசும் இன்றுவரை கெடு விதித்து உள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம்  பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கப்படும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான பேருந்துகள் தனியார் ஓட்டுனர்களை வைத்தே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்னும் ஒருசில நாளில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால், பொங்கலுக்கு சிறப்பு பேருந்து முன்பதிவு மையங்கள்  இன்னும் தொடங்கப்படவில்லை.

இதன் காரணமாக  பொங்கலுக்கு இயக்கப்பட வேண்டிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்று பொதுமக்களிடையே  சந்தேகம் எழுந்து உள்ளது.

வரும் 11ந்தேதி முதல் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை மற்ற ஊர்களில் வசித்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்குவர். இந்நிலையில், இந்த ஆண்டு சிறப்பு பேருந்து இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெரும்பாலானோர் தனியார் பேருந்துகளை நாடிச்செல்லத் தொடங்கி உள்ளனர்.