திருநெல்வேலி
ஓட்டுநர்கள் பணியின் போது செல்போனை பயன்படுத்தக்கூடாது என நெல்லை போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
பேருந்து ஓட்டுநர்கள் சிலர் பணியின் போது செல்போனை பயன்படுத்துவது குறித்து அடிக்கடி புகார் எழுந்துள்ளன. வண்டியை செலுத்தும் போது செல்போனில் பேசுவதால் ஓட்டுநர் கவனம் சிதறி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பயணிகள் கடுமையாக பயம் அடைகின்றனர். இதர்கு த்டை விதிக்க பலரும் கோரிக்கை விடுத்டுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மண்டலத்தில் திருச்செந்தூர் பகுதியில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அந்த மண்டல போக்குவரத்துத்துறை வெளியிட்டது. அதன்படி பணியில் இருக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் தங்களின் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் எனவும், அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும்போது கட்டாயமாக செல்போனை பயன்படுத்தக்கூடாது எனவும், தன்னிடம் இருக்கும் செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.