சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் குறித்து டிசம்பரில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்து செயலர் உறுதியளித்துள்ளார்.
போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 106 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை, நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக் கான பணப்பலன்களை வழங்க வேண்டும். அரசுத் துறை ஓய்வூதியர்களைப் போல போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். 2003-ம் ஆண்டுக்கு ஏப்.1-ம் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும், முழுமையாக ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழக்கில் மேல்முறையீடு செய்தது சரியல்ல. ஓட்டுநர் – நடத்துநர் (டி அண்ட் சி) என நியமிக்காமல், இரு பணிகளுக்கும் தனித்தனியே ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
வாரிசு வேலையில் பெண்களுக்கான தகுதியில் உயரத்தை குறைப்பது தொடர்பாக இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன.
உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டங்களை அறிவிப்பதும், பின்னர் அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டங்களை வாபஸ் பெறுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தும் வகையில் டிச.17-ம் தேதி 30 ஆயிரம் பேர் பங்குபெறும் வகையில் சென்னையில் அரை நிர்வாண போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இன்று போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டியை, போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்ச ங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடராஜன், ஆறுமுக நயினார், தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது, முழுமையாக ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழக்கில் மேல்முறையீடு செய்தது சரியல்ல. ஓட்டுநர் – நடத்துநர் (டி அண்ட் சி) என நியமிக்காமல், இரு பணிகளுக்கும் தனித்தனியே ஊழியர்களை நியமிக்க வேண்டும் என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
அவர்களிடம் பேசிய பணிந்திர ரெட்டி, டிசம்பர் 2வது வாரத்தில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். மேலும், ஓய்வு கால பணப் பலன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக செயலர் தெரிவித்ததாகவும், அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. வாரிசு வேலை உடல் தகுதி தொடர்பாக விரைவில் அரசாணை பிறப்பிக்கப் படும் என்று உறுதி அளித்ததாகவும், வரவு செலவுக்கு இடையேயான வித்தியாசத் தொகை தொடர்பான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் துறைச்செயலர் கூறியதாக தொழிற்சங்கத்தினர் கூறினர்.