கொல்கத்தா:
போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதால் இந்தியா -வங்கதேச நாடுகளின் பொருளாதாரம் உயரும் என்று உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“போக்குவரத்து இணைப்பு: கிழக்கு தெற்காசியாவில் போக்குவரத்து ஒருங்கிணைப்பின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவது ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதால் வங்கதேச நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 297 சதவீதமும், இந்தியாவுக்கான வங்கதேச ஏற்றுமதியில் 172 சதவீதம் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவிற்கும் வந்கதேசத்திற்குமான வர்த்தகம் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அது அதன் தற்போதைய திறனைக் காட்டிலும் 10 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று வங்கதேசம் மற்றும் பூடான் நாடுக்ளுனான உலக வங்கியின் இயக்குனர் டெம்பன் தெரிவித்துள்ளார்.