மும்பை: நாட்டிலேயே முதன்முதலாக, தேர்தல் கமிஷனின் நல்லெண்ண தூதர்களில் ஒருவராக, திருநங்கை ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நியமனம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 2014ம் ஆண்டுவரை, வாக்காளர்களில், திருநங்கைகள் என்ற தனிப்பிரிவு குறிப்பிடப்பட்டிருந்ததில்லை. ஆனால், அந்தாண்டில்தான், ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற வகைப்பாட்டின் வரிசையில், திருநங்கைகள் என்பதும் ஒரு பாலின வகையாக சேர்க்கப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டில், மராட்டிய மாநிலத்தில் மட்டும் 918 பேர் தங்களை திருநங்கை வாக்காளர்களாக பதிவு செய்திருந்தனர். தற்போது, அந்த எண்ணிக்கை 2,086 என்ற அளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி