கொல்கத்தா

மேற்கு வங்க அரசு 150 ஆண்டுகள் பழமையான கொல்கத்தா டிராம் போக்குவரத்து சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநில போக்குவரத்து அமைச்ச சினேகசியஸ் சக்ரவர்த்தி,

“மெதுவாக நகரும் இந்த டிராம்கள் மிகப்பெரிய வகையில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கிறது. வாகன போக்குவரத்து அதிகரிப்பதால் இனி இதனைத்தொடர்வது சாத்தியமில்லை. இருப்பினும், மைதானத்தில் இருந்து எஸ்பிளனேட் வரையிலான பாரம்பரியப் பகுதியானது, இனிமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சவாரியை விரும்புவோருக்காக தொடர்ந்து செயல்படும்”

எனத் தெரிவித்துளார்.

அரசின் இந்த முடிவுக்கு, டிராம் ஆர்வலர்கள் மற்றும் கொல்கத்தா டிராம் பயனர்கள் சங்கம் (CUTA) எதிர்ப்பினை தெரிவித்தது. மாசுபடுத்தாத மற்றும் சராசரியாக மணிக்கு 20-30 கி.மீ. வேகம் கொண்ட டிராம்களுக்கு ஆதரவாக அவர்கள் வாதிடுகின்றனர். CUTA உறுப்பினர் கௌசிக் தாஸ், பயன்படுத்தப்படாத டிராம் கார்களை தொடர்ந்து பராமரிப்பது சீரான செயல்பாட்டை உறுதி செய்யும் என்று பரிந்துரைத்தார்.

கொல்கத்தா டிராம்களை காப்பாற்ற CUTA சங்கம் சமூக வலைதளத்தில் ஒரு ஹேஷ்டேக் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. மேலும் நகரம் முழுவதும் உள்ள ஐந்து டிராம் டிப்போக்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.