
புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் பயிற்சி போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், தமிழக விமானி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டம், கென்கதாஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்டது பிரசல் விமானப் படை தளம்.
இங்கு, பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கேப்டன் சன்ஜிப் குமார் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா ஆகியோர் உயிரிழந்தனர்.
இவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel