மும்பை: பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் என்பவர் பயிற்சியில் சேருவதற்கு முன் பே, தனக்கு வீடு, கார் தேவை என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து, பூஜா கேத்கர் ஐஏஎஸ்-க்கு தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட உள்ள நன்னடத்தை ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உதவி கலெக்டராக பொறுப்பேற்கும் முன் புனே மாவட்ட கலெக்டரிடம் அவர் தனி வீடு மற்றும் கார் கேட்டு மிரட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2023-ஐ சேர்ந்த பெண் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. முறையான பணி வழங்குவதற்கு முன்பே அவர் தனது செடான் காரில், சைரன், விஐபி நம்பர் பிளேட்கள் மற்றும் “மகாராஷ்டிர அரசு” ஸ்டிக்கர் காரில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மேலும், பயன்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுகளை எழுந்துள்ளது.
மேலும், புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோர் இல்லாத நேரத்தில் அவரது அலுவலகத்தை அவர் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அலுவலக தளபாடங்களை அகற்றிவிட்டு லெட்டர்ஹெட்களைக் கோரியதாவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரியான அவளது தந்தை அவளது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக புனே ஆட்சியர் சுஹாஸ் திவாஸ் மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்ததை அடுத்து, திருமதி கேத்கர் வாஷிமுக்கு மாற்றப்பட்டார்.
பொதுவாக பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள், 24 மாதங்கள் நன்னடத்தையில் இருக்க வேண்டியது அவசியம்.ஆனால், அதை பூஜா கேத்கர்முறையாக கடைபிடிக்காமல் அடாவடியில் ஈடுபட்டதால், அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பூஜா கேத்கர் எவ்வாறு ஐஏஎஸ் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டார், என்பது கேள்விக்குறியாகி உள்ளது. சிவில் சேவைகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனும் அவரது தேர்வை சவாலுக்கு உட்படுத்தியது, பிப்ரவரி 2023 இல் அவருக்கு எதிராக தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இருந்தபோதிலும், அவர் தனது சிவில் சர்வீஸ் நியமனத்தை உறுதி செய்ய முடிந்தது. போட்டி சிவில் சர்வீசஸ் தேர்வில் ஒப்பீட்டள வில் குறைந்த அகில இந்திய ரேங்க் 841 மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் அவர் தேர்ச்சி பெற்றார். இதனால்,
கேத்கரின் தேர்வு செயல்முறை, குறிப்பாக ஓபிசி அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அந்தஸ்து குறித்த பல்வேறு சந்தேங்கள் எழுந்துள்ளன. மேலும், ஐஏஎஸ் படிப்புக்கான தேர்வுச் செயல்பாட்டில் சலுகைகளைப் பெற, அவர் பார்வை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறியிருந்தார், ஆனால் அவரது குறைபாடுகளை உறுதிப்படுத்த கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மறுத்துவிட்டார் என்றும், அவர் ஐந்து முறை சோதனைகளைத் தவிர்த்து விட்டதாகவும், ஆறாவது பாதியில் மட்டுமே கலந்துகொண்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுபோல, பார்வை இழப்பை மதிப்பிடுவதற்கான MRI சோதனைக்கு அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.