ராமேஸ்வரம்
அடுத்த மாதம் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.
கடந்த 1914 ஆம் ஆண்டு தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள பாம்பன் ரயில் பாலம். ராமேசுவரம் தீவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் திறக்கப்பட்டது. நம் நாடு கடல் வழி வணிகத்தில் தழைத்தோங்கிய காலத்தில் இந்த ரயில் பாலம் முக்கிய பங்கு வகித்துள்ளது. கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுப்பகுதியில் தண்டவாளத்தை இரண்டாக பிரிப்பது போன்று தூக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
சுமார் 2.05 கி.மீ. நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெயரையும் பெற்றது. இது நூற்றாண்டை கடந்து பழமையான பாலம் ஆகிவிட்டதால் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் அந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரூ.545 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்தது. தற்பொது இப்பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன. புதிய பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது.
விரைவில் பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் முடிந்துள்ளன. நவீன தொழில்நுட்பத்தில் அமைத்த தூக்குப்பாலத்தை திறந்து மூடி, ரெயில்களை இயக்குவதற்கான சோதனை நடத்தப்படு ரயில் போக்குவரத்து பாதுகாப்பு ஆணியரின் ஆய்வு நடக்க உள்ளது. செய்த ஆய்வு முடிந்து ரெ்யில் இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் அந்த பாதையில் மீண்டும் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.
அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி அல்லது அக்டோபர் 15-ந் தேதி பாம்பன் பாலத்தை தொடங்கி வைக்கும் விழா நடக்கலாம் என தெரிய வந்துள்ளது. புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.