சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்  மூன்று புதிய மாற்றங்களை இந்தியன் ரயில்வே முன்னெடுத்தள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ஒரு ஐடியில் இருந்து இரு டிக்கெட்டுக்கள் மூலமே தட்கலில் பதிவு செய்ய முடியும்.

1. அனைத்து முன்பதிவுகளுக்கும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2. முன்பதிவு நேரம் 120 நாட்களில் இருந்து 90 நாட்களாகக் குறைக்கப்பட்டது
3. ரத்துசெய்தல் பணத்தைத் திரும்பப் பெறும் நேரம் 2 நாட்களாகக் குறைக்கப்பட்டது

ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்களை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.  இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.  இந்த புதிய விதிமுறைகள், ரயில் பயணிகளின் வசதிக்காகவும், முறைகேடுகளைக் குறைப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டு இருப்பதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறையில் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்வார்கள் என்பதால், டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மூன்று மாற்றங்களை இந்தியன் ரெயில்வே செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

முன்னதாக, வெவ்வேறு ரயில்களில் வெவ்வேறு முன்பதிவு காலங்கள் இருந்தன. இது குழப்பமாக இருப்பதால் பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு காலத்தை ஒரே மாதிரியாக மாற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது.

1. அனைத்து முன்பதிவுகளுக்கும் ஒரு முறை கடவுச்சொல் (OTP)
2. முன்பதிவு நேரம் 120 நாட்களில் இருந்து 90 நாட்களாகக் குறைக்கப்பட்டது
3. ரத்துசெய்தல் பணத்தைத் திரும்பப் பெறும் நேரம் 2 நாட்களாகக் குறைக்கப்பட்டது

 மே 1 ஆம் தேதியில் இருந்து மெயில், எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர்பாஸ்ட் என இந்த வகை ரெயிலாக இருந்தாலும், அனைத்து ரெயில்களுக்கும் சரியாக 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.

2. தட்கல் மூலம் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதிலும் இப்போது முன்பதிவு நேரங்கள் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  ஏசி வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவுகள் காலை 10 மணிக்கும் ஸ்லீப்பர் வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளை காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.  அதேபோல ஒரு பயனர் ஐடி ஒரு நாளைக்கு 2 தட்கல் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

3. புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கும் முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால், 75 சதவீத பணம் திரும்பக் கிடைக்கும். புறப்படுவதற்கு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், உங்களுக்கு 50 சதவீத பணம் திரும்பப் கிடைத்துவிடும். 24 மணிநேரத்திற்குள் ரத்து செய்தால், எந்தத் தொகையும் திரும்பக் கிடைக்காது.

சார்ட் தயாராகும் நேரத்தில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு, முழு பணத்தைத் திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.

மோசடி முன்பதிவு மற்றும் முகவர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியின் கீழ், பயணிகள் இப்போது IRCTC போர்டல் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் OTP சரிபார்க்கப்பட வேண்டும். பயணிகள் கட்டண நுழைவாயிலில் நுழைவதற்கு முன்பு ஒரு முறை கடவுச்சொல் மூலம் மொபைல் எண்ணைச் சரிபார்க்க வேண்டும். இது பதிவுசெய்யப்பட்ட IRCTC பயனர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு பயனருக்கும் பொருந்தும். டிக்கெட் ஒரு உண்மையான பயணியால் முன்பதிவு செய்யப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துவதன் மூலம் மற்றொரு நிலை பாதுகாப்பைச் சேர்ப்பதே இதற்குக் காரணம்.

முன்பதிவு காலத்தில் உள்ள முக்கிய மாற்றங்களில், தற்போதைய 120 நாட்களில் இருந்து 90 நாட்கள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மே 1 முதல், சிறப்பு ரயில்கள் மற்றும் பண்டிகை சேவைகளைத் தவிர, பயணிகள் பயணத்திற்கு 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இது ரயில்களின் திட்டமிடல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் என்றும், டவுட்கள் அல்லது பாட்கள் டிக்கெட்டுகளை வைத்திருப்பதைத் தடுக்கும் என்றும் ரயில்வே வாரியம் சுட்டிக்காட்டுகிறது.