திருவனந்தபுரம்

கேரளாவில் ரயில்நிலையத்தில் நிற்காமல் சென்று பிறகு அதே ரயில் நிலையத்துக்கு அந்த ரயில் திரும்பி வந்துள்ளது.

கேரளாவில், திருவனந்தபுரம் – ஷோரனூர் இடையே வேநாடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் இந்த ரயில் நேற்று முன்தினம் ஷோரனூர் நோக்கிச் செல்லும்போது, ஆலப்புழா மாவட்டம், செரியநாடு என்ற ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.  செரியநாடு ரயில் நிலையம் மாவேலிக்கரா, செங்கனூர் எனும் முக்கிய ரயில் நிலையங்களுக்கு இடையில் செரியநாடு உள்ளது. இது ஒரு ‘டி கிரேடு’ ரயில் நிலையம் ஆகும்.

காலையில் சுமார் 7.45 மணிக்கு இந்த ரயில் நிலையத்தை வேநாடு எக்ஸ்பிரஸ் வந்தடையும். அங்குப் பயணிகள் இறங்கி, ஏறிய பிறகு அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்டுச் செல்லும்.  நேற்று முன்தினம் வழக்கத்துக்கு மாறாக ரயில் நிலையத்தை ரயில் கடந்த சென்றதால் பயணிகளும் ரயில் நிலைய அதிகாரிகளும் குழப்பம் அடைந்தனர்.

சில நிமிடங்களில் அந்த ரயில் செரியநாடு ரயில் நிலையத்துக்கு ரிவர்ஸில் வந்ததும் அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ரயில்வே அதிகாரி ஒருவர், “செரியநாடு, ரயில் நின்று செல்லும் நிலையம் மட்டுமே என்பதால் அங்கு சிக்னல் கிடையாது.

எனவே  லோகோ பைலட்களால் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம். என்றாலும் இது உடனடியாக அவர்களின் கவனத்துக்கு வந்து ரயில் நிறுத்தப்பட்டது.  சுமார் 700 மீட்டர் தூரம் ரயில் பின்னால் சென்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் சென்றது. இதனால் 8 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. பிறகு இந்த தாமதம் ஓட்டுநர்களால் சரிசெய்யப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.