சென்னை

ன்று விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய்.

மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. ஆகவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.

தற்போது ‘கோட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.   இது ஒரு பக்கா ஆக்சன் திரைப்படமாக அமைந்துள்ளது. ரசிகர்கள்டையே விஜயின் மகனாக வரும் இளைய விஜய் கதாப்பாத்திரம் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘கோட்’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.