சென்னை: சென்னையில் நள்ளிரவு முதலே மழை பெய்து வரும் நிலையில், அதிகாலையிலேயே தூய்மை பணிக்கு வந்த இளம்பெண் தூய்மை பணியாளர் ஒருவர் மின்சார பாய்ந்த மழைநீரில் சிக்கி பலியானார். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கண்ணகி நகர் பகுதியை சார்ந்தவர் திருமதி வரலட்சுமி அவர்கள் இன்று காலை தூய்மை பணி வேலை செய்து வரும் வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது தெரியாமல் காலை வைத்ததால், அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சோகம் இன்று காலை 4 50 மணி அளவில் நடைபெற்றுள்ளது.
உயிரிழந்த வரலட்சுமிக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் இவர் என்று கூறப்படுகிறது. இவரது மரணம் தூய்மை பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்று இன்னொரு மரணம் நிகழ்வதற்குள் மின்சார வாரிய ஊழியர்கள், கேபிள்கள் சரியாக இருக்கிறதா, மழைநீரில் மின்சாரம் பாய்கிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குரல் எழுப்பி உள்ளனர்.
[youtube-feed feed=1]