சென்னை: வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (செப்டம்பர் 9ந்தேதி) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில், வைக்கப்பட்டு உள்ளது.

இநத்நிலையில்,   தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76)  மறைவுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளமான எக்ஸ் பதிவில்,  “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருத்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு கூறி உள்ளார்.