கமிஷன் வாங்கிக்கொண்டாவது தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யட்டும் அரசு

Must read

கார்த்திகேய சிவசேநாதிபதி (Karthikeya Sivasenapathy) அவர்களின் முகநூல் பதிவு:
2014 இல் 10 ரூபாய்க்கு விற்ற தேங்காயின் இன்றைய விலை ரூ 6 மட்டுமே ( நல்ல காலம் வந்திருச்சு….)
வணிகர்களால் வணிகர்களுக்காக நடத்தப்படும் வணிகர்களின் அரசு இன்றைய நம் அரசு. இந்தியாவின் பாமாயில் இறக்குமதியால் இந்தோனேசியா மற்றும் மலேசிய விவசாயிகளே பலனடைகிறார்கள். எனவே இறக்குமதிக்கான மானியம் மற்றும் இறக்குமதி தீர்வை ஆகியவற்றை தயவுசெய்து குறையுங்கள்.
13336080_1169876286376593_8931632018649833448_n
 
2008 முதல் 2011 ஆம் ஆண்டுகளைப்போல தமிழக அரசு ரேசன் கடைகளில் பாமாயில் விநியோகிப்பதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விநியோகிக்க வேண்டும். இப்படிச் செய்வது தென்னை விவசாயிகளுக்கு பலனளிப்பதுடன் குழந்தைகள் மற்றும், பெரியவர்களின் உடல்நலனுக்கும் உதவி செய்வதாகவும் அமையும். பாமாயில் இறக்குமதிக்கு அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறார்கள்.ஏனெனில் பாமாயில் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அவர்களுக்கு பெரும் தொகை கமிஷனாக கிடைப்பதே காரணம். எனவே தென்னை விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பை தயவுசெய்து நாம் உருவாக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அதன்மூலம் ஒரு தேங்காயை 10 ரூபாய்க்கு விற்றுக் கொடுத்தால் அதற்காக தேங்காய் ஒன்றுக்கு 1 ரூபாய் கமிஷன் தொகையாக கொடுப்போம். பாமாயிலை இறக்குமதி செய்து தென்னை விவசாயிகளையும் தேங்காய் நுகர்வோர்களையும் கொல்வதற்காகப் பதிலாக தயவுசெய்து உதவி செய்யுங்கள்.
அத்துடன் உங்களுக்கான் கமிஷன் தொகையையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
 

More articles

Latest article