டெல்லி

தொடர்ந்து 3 நாட்களாக டெல்லியில் காற்றின் தர்ம மோசம் அடைந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக டெல்லியில் காற்று மாசு மிக அதிகமாக இருந்தது. இங்கு நேற்று மிக மோசமான நிலைக்கு சென்று கடும் பனிமூட்டம் நிலவியது.  டெல்லியி நகரில் உள்ள39 காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. அதாவது நேற்று முன்தினம் 334-ஆக இருந்த காற்று மாசு அளவு நேற்று காலை 9 மணியளவில் 428 ஆக அதிகரித்தது.

டெல்லியின் ஆனந்த் விஹார் , இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், மந்திர் மார்க், பட்பர்கன்ஜ் ஆகிய பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. பனிப் பொழிவு காரணமாக, டெல்லி குறைந்தபட்ச வெப்பநிலை 16.1 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. எனவே காலையிலும், மாலையிலும் பனிமூட்டம் நிலவுவதோடு காற்று மாசும் இணைந்துள்ளது.

தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் கடுமயான காற்று மாசு நிலவுகிறது. டெல்லியில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவுகளின் படி, காற்றின் தரத்தை குறிக்கும் ஏகியூஐ குறியீட்டில் 409 என பதிவாகியுள்ளது. மேலும் பனிமூட்டம் போல காற்று மாசு நிலவுவதால், சாலைப்போக்குவரத்தும் விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.