நெட்டிசன்:
மூத்த செய்தியாளர் டி.என்.கோபாலன் முகநூல் பதிவு
ஜெ.ஆட்சியின்போது தமிழகத்தில் ஏற்பட்ட கட்அவுட் கலாச்சாரத்தை எதிர்த்து நீதிமன்றங்களில் குரல் கொடுத்து, கட்அவுட் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் சமூக ஆர்லர் டிராபிக் ராமசாமி.
ஆனால், சென்னை கூடுவாஞ்சேரியில் தனியார் நிகழ்ச்சிக்கு சென்ற அவரை வரவேற்று சாலையோராம் ஏராளமான கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது. இது பார்ப்போரை சிரிக்க வைத்தது.
கட்அவுட்டுக்கு எதிராக போராடிய டிராபிக் ராமசாமிக்கு கட்அவுட்டா? அவரும் கட் அவுட் மோகத்துக்கு அடிமையாகி விட்டார் போலும் என அதை பார்ப்பவர்கள் பேசிக்கொண்டார்கள்…