சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மத்திய அமைச்சர் உள்பட 2 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

இந்தியாவில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தினசரி 90ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. மொத்த பாதிப்பும் 52லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் மரணம் அடைந்தும் உள்ளனர்.
ஏற்கனவே அமித்ஷா உள்பட அமைச்சர்கள் எம்.பி.க்கள் என மொத்தம் 29 பேருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,நேற்று முன்தினம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதியானது.
இந்த நிலையில் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல், பாஜக மாநிலங்களவை எம்பி வினய் சஹஸ்ராபுத்தே (Vinay Sahasrabuddhe) ஆகிய 2 எம்பிக்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக, கொரோனா பாதித்த எம்பிக்கள் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு வரும் எம்பிக்கள், அவருடைய உதவியாளர்கள், அதிகாரிகள், பாதுகாவலர்கள், செய்தியாளர்களுக்கு பரிசோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]