வெறும் 15 வினாடிகளே சார்ஜ் செய்து கொண்டு 2 கிலோ மீட்டர் ஓடும் நகர பேருந்துகளை சுவிட்சர்லாந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

tosa

இந்த பேருந்துக்கு டோசா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது வெளிப்பார்வைக்கு ஐரோப்பாவில் ஓடும் சாதாரண நகர பேருந்து போல தோற்றமளித்தாலும் பேருந்தின் மேற்கூரையில் இருக்கும் அமைப்பு பேருந்தை அவ்வப்போது சார்ஜ் செய்துகொள்ள உதவுகிறது.
இப்பேருந்தில் ஒரே நேரத்தில் 130 பேர் பயணம் செய்ய இயலும். இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் எரிபொருள் செலவு பெருமளவு மிச்சமாகும். கார்பன்-டைஆக்ஸைடை உமிழ்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தீமையும் இல்லை. இப்பேருந்து 2018 ஆம் ஆண்டுமுதல் முழு வீச்சில் இயங்கத் துவங்கும் என்று தெரிகிறது. அதன்பின்னர் இப்பேருந்து ஒவ்வொரு நாளும் 10,000 பயணிகளை சுமந்துசெல்லவிருக்கிறது.