சென்னை

நாளை குரூப் 2 தேர்வு நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் குரூப்-2, 2ஏ பதவிகளில் உள்ள 2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. இதற்கு ஆன்லைன் வாயிலாக 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை (சனிக்கிழமை) இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்களில் நடக்க இருக்கிறது.

இதையொட்டி,

”தோ்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டபடி காலை 9 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்ல் முழுவதும் உள்ள பல பள்ளிகள் குரூப்-2 தேர்வு மையங்களாக செயல்படுதால் குரூப் 2 தேர்வு நடைபெறுவதையொட்டி நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப்  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.