போபால்

ற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

File picture

நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.  தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.  மத்தியப் பிரதேச மாநிலத்தில்  நேற்று வரை 7.92 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 10,517 பேர் உயிர் இழந்து 7,81,772 பேர் குணம் அடைந்துள்ளனர்.  97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இங்கு ஏற்கனவே 6 முதல் 12 வகுப்புக்கள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டு 50% மாணவர்களுடன் வகுப்புக்கள் நடந்து வருகின்றன.   இங்கு நாளை  முதல் 1 ஆம் வகுப்பில் இருந்து 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக ஆரம்ப பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.  சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்த பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு முறைகளை மத்தியப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது.  இந்த நெறிமுறைகளின்படி இந்த பள்ளிகளும் 50% மாணவர்களுடன் இயங்க உள்ளன.  முக கவசம், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.