சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை (மே 20ந்தேதி)  காலை 9 மணி முதல் மாலை 5 மணி  வரை சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 5 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.  மேலும் 3 மாவட்டங்களிலும் பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து  தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

சென்னை

திருமுல்லைவாயல் பகுதியில் ஆர்ச் ஆண்டனி நகர், பொதூர் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை. அதேபோல ஆவடி பகுதியில் சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், டிஆர்ஆர் நகர், தனலட்சுமி நகர், நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும்.

ஈரோடு மாவட்டம்:

சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம்.

பொள்ளாச்சி மாவட்டம்

கோமங்கலம், கோமங்கலம் புதூர், திப்பம்பட்டி, சங்கம்பாளையம், பண்ணை கிணறு, கோழி குட்டை, சீலக்காம்பட்டி, முக்கூடு, ஜல்லிபட்டி, மலையாண்டி பட்டணம், கெடிமேடு, கூல நாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலார்பட்டி, கோலார்பட்டிசுங்கம், , நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி மற்றும் பூசாரிப்பட்டி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

புதுக்கோட்டை  மாவட்டம்:

சண்முகா நகர், ஜேஜே கல்லூரி, சிவபுரம், தேக்காட்டூர், வல்லத்திரக்கோட்டை, திருவரங்குளம்,

திருவாரூர் மாவட்டம்:

நெய்வாசல், பனையக்கோட்டை, உம்பளச்சேரி, பாமணி, கொக்கலடி, வரம்பியம், ஆலங்குடி, படகச்சேரி, சித்தன் வாழூர், புலவர் நத்தம், நன்னிலம், கொளக்குடி, ஆலங்குடி, மாப்பிள்ளைக்குப்பம், முடிகொண்டான், சேந்தமகளம், தென்றல் நகர், ஈ.வி.எஸ்.நகர், கோகலடி, ராமநாதன் நகர். பாளையம், மருதப்பட்டினம், ஆதியக்கமங்கலம், ஆலிவலம், ஓடச்சேரி, அந்தகுடி, முஹண்டனூர், பூதனூர், எழுப்பூர், நல்லடை, முகந்தனூர், விளாகம், ஈச்சங்குடி, திருமகோட்டை, சோதிரியம், பரசபுரம், பழையூர்நத்தம், செட்டிச்சத்திரம், வடசெடிச்சத்திரம், உள்ளிக்காபட்டி, வேதபுரம், ஸ்ரீவாஞ்சியம், சோதிரியம், தெக்கரவெளி, செங்கனூர், வேலங்குடி. உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம், களப்பால்,

மேற்கண்ட மாவட்டங்களில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். இதனைத்தொடர்ந்து மின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் வழக்கம்போல் மின் வினியோகம் வழங்கப்படும். இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.