டெல்லி

நாளை நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர்மோடி முதன்முறையாக தனது வாரணாசி தொகுதிக்கு செல்ல உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மோடி  மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார்

பதவியேற்றபின், முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி இத்தாலி சென்று வந்தார். அடுத்து வரும் 18ஆம் தேதி அன்று அதாவது நாளை  பிரதமராகப் பொறுப்பேற்ற பின் தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு முதல்முறையாக மோடி செல்ல உள்ளார்.

அவர்அங்கு, விவசாயிகளுக்கு சுமார் ரூ.20,000 கோடி விவசாய நிதியை வழங்கவுள்ளதாகவும், தொடர்ந்து அரசால் பயிற்சியளிக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 30,000 பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.