வாஷிங்டன்
நாளை இரவு பூமியின் பாதையை பூமிக்கு 23.80 லட்சம் மைல்கள் தூரத்தில் ஒரு சிறு கோள் கடக்கும் என நாசா அறிவித்துள்ளது.
ஆஸ்டிராய்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிறு கோள்கள் அளவில் மிகச் சிறியதாகவும் ஒரு சில வேளைகளில் பாறைகளைப் போலவும் உள்ள பொருட்கள் ஆகும். இவை சூரியன் வட்டப்பாதையில் உள்ளவை எனக் கூறப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களில் சுற்றுப்பாதையில் காணப்படுகின்றன.
இந்த சிறு கோள்கள் சுமார் 4.5 லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இந்த சிறு கோள்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 24 அன்று பூமியின் பாதையில் கடந்து சென்ற சிறு கோள் பற்றி தகவல் தெரிவித்தது. இந்த சிறு கோள் பூமியில் இருந்து 13,000 மைல்கள் தூரத்தில் கடந்தது.
தற்போது மீண்டும் மற்றொரு சிறு கோள் பூமியின் பாதையைக் கடக்கும் என கண்டறிந்துள்ளது. இந்த விண்கலத்துக்கு 2020 ஆர்கே2 என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு போயிங் 747 விமானத்தின் அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. இது 23.80 லட்சம் மைல்கள் தூரத்தில் பூமியைக் கடக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது இதன் அகலம் 118 முதல் 265 அடி இருக்கலாம் எனவும் இதன் வேகம் விநாடிக்கு 6.68 கிமீ இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சிறு கோள் பூமியைக் கடக்கும் போது பூமியைத் தாக்க வாய்ப்பில்லை என நாசா அறிவித்துள்ளது. இந்த வேகத்தில் மற்றும் இந்த தூரத்தில் பயணிக்கும் சிறு கோளை பூமியில் இருந்து பார்ப்பதே கடினம் எனக் கூறப்படுகிறது.,
இந்த வருடம் நாசா விஞ்ஞானிகள் இந்த ஒரு சிறு கோள் மட்டுமின்றி ஐந்துக்கும் மேற்பட்ட சிறு கோள்கள் பூமியை கடக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.க் ஏற்கனவே இதற்கு முன்பு ஒரு பேருந்தின் அளவிலான அதாவது 26 மீட்டர் சுற்றளவில் சிறு கோள் ஒன்று அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி அன்று பூமியைக் கடந்துள்ளது.