ம்மு

நாளை ஜம்மு காஷ்மீரின் 24 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதலாவது சட்டசபை தேர்தல்   3 கட்டங்களாக  நடத்தப்படுகிறது. ஒன்றுபட்ட மாநிலமாக இருந்த காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் சட்டசபை தேர்தலும் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் முதலாவது அரசை அமைப்பதற்கு பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி போன்ற மாநில கட்சிகளும் தீவிரமாக களத்தில் குதித்து உள்ளன. காஷ்மீரில் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள், மூத்த நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் தேசிய மற்றும் உள்ளூர் தலைவர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர்

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இவற்ரில் 16 தொகுதிகள் காஷ்மீர் பிராந்தியத்திலும், 8 தொகுதிகள் ஜம்முவிலும் உள்ளன. இங்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. இந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்து நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.