நமது பாரத பூமி முழுவதும் கொண்டாடப்படும் முதன்மையான பண்டிகை தீபாவளி.. இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் அல்ல இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகைதான் தீபாவளி.
இன்றைய தினம் ஒவ்வொருவரும் நல்லெண்ய் தேய்த்து , பின்னர் சீயக்காய் கொண்டு வெந்நீரில் குளிப்பது சிறந்தது. அதாவது நாம் ஆரோக்கியமாக வாழவும், நம் ஆரோக்கியத்தை மேலும் காத்துக் கொள்வதற்கும் வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் ஸ்நானம் செய்யுங்கள் என பெரியவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.. இதனால் தீபாவளி அன்றாவது நாம் எண்ணெய் ஸ்நானம் (கங்கா ஸ்நானம்) செய்து உடல் ஆரோக்கியத்தை பெறுவோம்.
தீபாவளி அன்று அதிகாலை காலை 3 மணி முதல் 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரமாகும். மற்றும் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது. நல்லெண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேணடும். அத்துடன் அந்த குளிக்கும் வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்து அதில் நீர் நிரப்பி கங்கா ஸ்நானம் செய்து நலம். தீபாவளி அனறு எண்ணை தேய்ந்து குளிப்பதையே ‘கங்காஸ்நானம்’ என்று புனிதமாக சொல்வார்கள்.
தீபாவளி தினத்தில் கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகாவும் ஐதீகம்
தீபாவளி அன்று புத்தாடை உடுத்துவதும் சிறந்தது. காலையில் குளித்து முடித்ததும், புத்தாடைகளை சுவாமி படத்தின் முன்பு வைத்து வணங்கி விட்டு அத்துடன் அந்த புத்தாடைகளின் ஒரு ஓரத்தில், சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும். வாழ்வை வெளிச்சமாக்கும்.
தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது துஷ்ட சக்திகளை விரட்டும் என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், அன்றைய தினம் ஒவ்வொருவர் வீட்டிலும், தாங்கள் செய்த பலங்காரங்களை வைத்து, வீட்டில் விளக்கேற்று வழிபாடு செய்துவிட்டு, புத்தாண்டை அணிந்து பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும்.
இதியாவை பொறுத்தவரை தீபாவளி மிக முக்கிய பண்டிகையாக பார்க்கப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் கலாசாரத்திற்கு ஏற்றார் போல் தீபாவளியை கொண்டாடுவார்கள். வட இந்தியாவில் 5 நாள்கள் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். புராணங்களின் படி, இராவணனை வதம் செய்த ராமர், அயோத்திக்கு திரும்பிய அன்று அமாவாசையாக இருந்ததால் மக்கள் தீபங்களை ஏற்றி அவரை வரவேற்றனர்.
இதனை தீபாவளியாக கருதி வட இந்தியர்கள் பலர் தீபாவளியை கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததை கொண்டாடும் வகையில் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இவ்வாறு புராணங்களில் பல கிளைக்கதைகளும் உள்ளன. வட இந்தியர்கள் தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். தமிழர்கள் தீபாவளி அன்று வெடிவெடித்தும், பல வகையான பலகாரங்களை தயார் செய்து, உறவினர்களுக்கு வழங்கியும், வீடுகளில் விளக்கேற்றியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றன.
நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதி வடிவாக இருக்கிறார். இந்த ஜோதி வடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். .தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.
ஒவ்வொருவர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, போன்ற தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.என்பது தத்துவம். தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
வாழ்க்கையை வழங்குபவன் இறைவன்… அதை இனிமையாக வாழ தெரிந்தவர்கள் மனிதன்… வாழ்க்கையிற்க்கு வெளிச்சம் கொடுப்பவர்கள் மாமனிதன். தானும் வாழ்ந்து பிறறையும் வாழ வைப்பவன் தலைவன்…. வாழ்க்கையைய் பிறருக்காகவே தியாகம் செய்து வாழ்பவர்கள் யோகி. இதுததான் மனிதனின் வாழ்க்கை தத்துவம். இதில் நாம் எவ்வகை என்பதை நம்மை நாமே அறிந்துகொள்ள முடியும்.
அனைவருக்கும் பத்திரிகை டாட் காம் இணையதள பத்திரிகையின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்