டெல்லி

நாளை காங்கிரஸ் நாட்டாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இன்று புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தின் முக்கிய கமிட்டி அறையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்துள்ளது கூட்டத்தில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மக்களவை துணை தலைவர் கவுரவ் கோகாய், மாநிலங்களவை துணை தலைவர் பிரமோத் திவாரி ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாளை தொடங்கி ஆகஸ்டு 12-ந்தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.  இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில், டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் நாளை கூடுகிறது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில், இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நடத்துகிறது என்பது குறிப்பிடத்தகதாகும்.,